Posts

Showing posts from July, 2023

மீண்டும் மீண்டும் கேட்கிறேன்

Image
எந்நிலத்தவரே! இந்நிலத்தவரே!! மீண்டும் மீண்டும் கேட்கிறேன் உங்களால் கண்களை மூட முடிகிறதா? நம் சகோதரிகளிலும், உம்மகள்களும் இனத்தின் பெயரால் இழிவிலும் இழிவான முறையில், வீதிதோறும் உதிரம்கூட சிந்த வழியின்றித்  துவண்டு நடந்தது மறக்கமுடிகிறதோ ? எனக்கும் சொல்லித் தாருங்கள்! கண்டும் காணாதது போல், உண்டும் உரைக்காதது போல், இந்துத்துவ கொள்கைப் படித்து, அமைதி காக்க எனக்கும் சொல்லித் தாருங்கள்! உளமாற செய்யாத தவறுகளை உணர்வோடு ஒப்பிட உறவு மறந்து உலகையே உதறுகிறோம். வாழ்வின் தேவைகளையும் கேட்டால் போராட்டம். அந்தப் போராளிகளை இனவெறியினால் அழித்து தேரோட்டம். எனக்கு விக்கல் வரும் வரை ஏதும் சிக்கல் இல்லை என்ற என்னன்பு குடிமக்களே ! நம்மால் என்செய்திட முடியும் என்று நீர் விமர்சிப்பதையும் யான் அறியேன் தக்காளியைப் போல் உயர்பதவி இல்லையெனினும் வெங்காயமாகக் கூட கண்ணீர்ச் சிந்த தோன்றவில்லையா ? வசனங்கள் பேசி ஏமாற்றி அவர்கள் பழகி விட்டார்கள் நாமும் அவர்கள் தரும் இலயங்கள் பெற பழகிவிட்டோம் என்று சமாளிப்பதத்தில் வெக்கமில்லையா ? எங்கோ ஒருவன் எதோ பாட்டுக்கு ஆடுகிறான் அதைப் பலருக்கு பகிர்ந்து அதைப்பற்றிப் பேசி மகிழ்கிறாய...