மீண்டும் மீண்டும் கேட்கிறேன்

எனக்கும் சொல்லித் தாருங்கள்!கண்டும் காணாதது போல்,உண்டும் உரைக்காதது போல்,இந்துத்துவ கொள்கைப் படித்து,அமைதி காக்க எனக்கும் சொல்லித் தாருங்கள்!
உளமாற செய்யாத தவறுகளைஉணர்வோடு ஒப்பிடஉறவு மறந்துஉலகையே உதறுகிறோம்.
வாழ்வின் தேவைகளையும் கேட்டால் போராட்டம்.அந்தப் போராளிகளை இனவெறியினால் அழித்து தேரோட்டம்.
எனக்கு விக்கல் வரும் வரைஏதும் சிக்கல் இல்லைஎன்ற என்னன்பு குடிமக்களே !
நம்மால் என்செய்திட முடியும்என்று நீர் விமர்சிப்பதையும் யான் அறியேன்தக்காளியைப் போல் உயர்பதவி இல்லையெனினும்வெங்காயமாகக் கூட கண்ணீர்ச் சிந்த தோன்றவில்லையா ?

எங்கோ ஒருவன் எதோ பாட்டுக்கு ஆடுகிறான்அதைப் பலருக்கு பகிர்ந்துஅதைப்பற்றிப் பேசி மகிழ்கிறாயேகுடிமகனாய் நெஞ்சை நிமிர்த்திகைகளை மனதில் வைத்து உணர்வோடு கூறுவாயே"அனைவரும் என் சகோதர சகோதரிகள்" என்றுஎங்கே சென்றது உன் தேசபக்திநிகழ்வது என்னவென்று அறியாதுஅறிந்தும் உணராதுமடமையோடு ஊமையாக இருக்கிறாயேநாளை உன் வீட்டில் இது நடந்திடஇமைப்பொழுது ஆகாது ..
இன்னமும் குதிரையாய் இல்லாதுஇங்கு நாடாகும் கதறல்களைக் கேளுஏன் என்று நீ கேட்டால் போதும் !வினாக்கள் எழுப்பாது இங்கு மனுக்கள் நடக்கின்றதுமனுவின் உண்மை அறிந்தால்மனிதம் நீ அறிவாய் !எழுக !கேள்வியாய்!வேள்வியாய்!!
Comments
Post a Comment